நடந்தது என்ன!

6:49 AM இல் நவம்பர்27, 2009 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்

விஜய் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்பட்ட நடந்தது என்ன! என்ற நிகழ்ச்சியை புதன்கிழமை மதியம் பார்க்க நேர்ந்தது. மிகவும் என்னை வேதனையுறச் செய்த நிகழ்ச்சியாக அது இருந்தது.

ஃபீடோபில் என்ற குழுவினைச் சார்ந்த ஒரு வெளிநாட்டினன் நம் இந்தியாவில் அதுவும் தமிழ்மண்ணில் இருந்துக்கொண்டு செய்த மிகவும் கேவலமான செயல்களை வெளிச்சம் போட்டுக்காட்டியது.

அச்செய்தி இதுதான் சிறுகுழந்தைகளை ஆசைக்காட்டி அவர்களுக்கு பிடித்தமானவற்றை கொடுத்து அவர்களை ஆபாசப்படம் எடுத்து கணிணியில் பதிவு செய்து வெப்சைட்டில் வெளியிடும் கேவலமான தொழிலை வில் ஹீயூம் என்றவன் செய்து வந்துள்ளான். ஒரே கணிணியில் இருந்து தொடந்து ஆபாசமான படங்கள் பதியப்படுவதை கண்டுப்பிடித்த ‘சைபர் க்ரைம்’ நம் தமிழ்நாட்டில் உள்ள அதன் பிரிவிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அவனை கைது செய்தது சூளைமேட்டில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில்! வீட்டிற்கு செல்ல படிக்கட்டுகள்கூட இல்லாத ஒரு வீட்டில்? அவன் விட்டினுள் சென்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அத்தனை வகையறாவும் உள்ளது!!!!

எலி பிடிப்பது போல நம் பூக்களை பிடித்து அவர்களை மயக்கி இவ்வளவு கேவலமான தொழில் செய்து பிழைத்து வந்துள்ளான் அந்த கொடூரன். இதில் வேடிக்கை என்னவென்றால் சில வருடங்களுக்கு முன் இதே விசயத்திற்காக அவன் சிறை சென்று வந்துள்ளான்.

இவன் இந்தியாவிற்குள் போலி விசா மூலமே வந்துள்ளான் என்று கண்டுபிடித்துள்ளனர். உள்ளே நுழைவதற்கே அனுமதியில்லாத அவனிடம் தெரியுமா என்னவெல்லாம் இருந்தது என்று!!!!

  • எரிவாயு (கேஸ்) இணைப்பு
  • குடும்ப அட்டை (ரே~ன் கார்டு)
  • வாக்காளர் அடையாள அட்டை

ஒரு இந்திய குடிமகனுக்கே கிடைக்கவில்லை இவற்றில் சில. ஆனால் அவனிடம் எல்லாம் இருந்தது. கிட்டத்தட்ட அவன் இந்திய குடிமகன் போல.

இதே தவறையோ அல்லது வேறு ஏதோ சிறு தவறையோ வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் இந்தியன் செய்தால் தண்டனை எவ்வளவு கொடூரமாக தரப்படுகிறது? மேலும் நாட்டைவிட்டே வெறுங்கையுடன் துரத்தப்டுகிறான் அல்லவா?

சிறை தண்டனை பெற்று ஒருவன் வெளியே வந்தால் அவன் என்ன செய்துக்கொண்டிருக்கிறான் என்று நம் அரசாங்கத்தால் பின்தொடரமுடியாதா? போலி விசா மூலம் உள்ளே வந்த ஒருவனை ஏன் நம் இந்தியாவில் வாழ அனுமதித்துள்ளோம்? அதனால்தானே உளவாளிகள் இந்தியாவில் அதிகரித்துள்ளனர்.

எதற்கெல்லாமோ சட்டதிருத்தம் கொண்டுவரப் போராடும் நம் அரசியல்வாதிகள் இதற்கு போராடக்கூடாதா? நம் இந்தியாவை காப்பாற்ற போராடக்கூடாதா?

ஏன் நம் இந்தியாவில் மட்டும் இப்படி?

மனிதாபிமானம் இறையுணர்வு என்று வாய்கிழிய பேசிக்கொண்டிருக்கிறோம் நாம்!

முள்விலங்கால் இவனைப் போன்றோரை கட்டிப்போடவேண்டும் என்றே துடிக்கிறது என் நெஞ்சம்.

சட்டம் இன்னும் இறுக்கவேண்டும் இவர்களைப்போன்றோரை!

எங்கே சென்று கொண்டிருக்கிறது நம் இந்தியா?

அடுத்து ஜென்மத்தில்!!!!!!

6:31 AM இல் நவம்பர்10, 2009 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்

அடுத்த ஜென்மத்தில் எப்படி, எங்கே, என்னவாகப் பிறக்கப் போகிறோமோ தெரியாது. ஆனால் இந்த ஜென்த்தில் நாம் அழியும் முன் செய்ய வேண்டியது என்ன? நிறைய இருக்கிறது. 2012 ல் உலகம் வேறு அழியப் போகிறதாம்.

  • முதலில் பகைமையை விட்டு ஒழியுங்கள்.
  • அன்பு செலுத்துங்கள்
  • தெரியாமல் யாரையாவது மனத்தளவில் காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்.
  • வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து அனுபவித்து வாழுங்கள்

அடுத்து ஜென்மத்தில்!!!!!!

என் தாய்க்கு தாயாக பிறக்க ஆசை!

என் தந்தைக்கு தந்தையாக பிறக்க ஆசை!

என் சகோதர சகோதரிகளுக்கு தோழியாக பிறக்க ஆசை!

என் நண்பர்களுக்கு சகோதர சகோதரியாக பிறக்க ஆசை!

என் மகளுக்கும் மகனுக்கும் தாயாகவே பிறக்க ஆசை!

என் கணவருக்கு மட்டும் குழந்தையாக பிறக்க ஆசை!



படித்ததில் பிடித்தது

8:03 AM இல் நவம்பர்2, 2009 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்

அலைப்பேசி செய்தி:

முடி வளர்ந்தால் வெட்டிக்கலாம்

நகம் வளர்ந்தாலும் வெட்டிக்கலாம்

ஆனால்

உன்

அறிவு வளர்ந்தால்???

கவலைப்படாதே

உன்

நல்ல மனதிற்கு

அப்படியெல்லாம் நடக்காது!!!

முள்வேலி

திணைகள்

ஐந்தென்பது

இனியில்லை

திணைகள்

ஆறு

முள்ளும் முள்வேலியும்

சார்ந்த இடம் என்பது

தமிழ்ச் சமூகத்தக்கு புது வரவு!

- ஞா. அண்ணாமலை ராஜா மழை ஆனந்தவிகடன் 04.11.09

கல்லூரிக் கேள்வித்தாள்களின் பரிணாமவளர்ச்சி

1995 – அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளி

2000 – ஏதேனும் ஐந்து வினாவிற்கு மட்டும் விடையளி

2008 – (அ) அல்லது (ஆ) விற்கு மட்டும் விடையளி

2015 – அனைத்து கேள்விகளை படிக்க மட்டும் செய்யவும்

2020 – தேர்விற்கு வந்தமைக்கு நன்றி

சிந்திக்க வைத்த குறுஞ்செய்தி

9:10 AM இல் அக்டோபர்22, 2009 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்

என் மகனுக்கு என் அலைபேசியில் அவன் தோழன் அனுப்பிய குறுஞ்செய்தி:

பள்ளியில் நம் சாதனைகள்

  • கற்றுக்கொண்டோம்…….நண்பர்களிடம் எந்த விசயமும் இல்லாமல் அரட்டை அடிப்பதற்கு!
  • கற்றுக்கொண்டோம் …….வாய் அசைக்காமல் பேசுவதற்கு!
  • கற்றுக்கொண்டோம் …….இமை மூடாமல் தூங்குவதற்கு
  • கற்றுக்கொண்டோம் ……..படிக்காமல் தேர்வு எழுதுவதற்கு!
  • கற்றுக்கொண்டோம் …….ஆசிரியர்கள் திட்டும்போது புன்னகைப்புரிவதற்கு!

சிரிக்கவும் அதே சமயத்தில் நம்மை சிந்திக்கவும் வைக்கிறது இக்குறுஞ்செய்தி இல்லையா?

இக்கால பள்ளி மாணவர்களின் நிலைதான் என்ன? பெரிய கேள்விக்குறிதானோ?

  • உண்மையிலேயே நண்பர்களிடம் எந்த விசயமும் இல்லாமல் அரட்டை அடித்து பொன் போன்ற நேரத்தை வீணாக்குவதாகத்தான் தோன்றுகிறது.பள்ளிக்கு சென்றவுடன் பேசவேக்கூடாது. அதனால் கிடைக்கும் நேரத்தில் அரட்டை அடிக்கிறார்களோ!?
  • என் வீட்டின் அருகே உள்ள ஒரு குழந்தை இந்த வருடம்தான் பள்ளிச்செல்ல ஆரம்பித்து உள்ளாள். அவளிடம் ஆசிரியை என்ன சொன்னார்கள் என்று கேட்டதற்கு வாயை மூடு என்கிறாள். பிறகுதான் தெரிந்தது அது அவள் ஆசிரியை அடிக்கடி கூறும் வார்த்தை என்று!?
  • உறங்க நேரமில்லாமல் வீட்டுப்பாடம். நனைந்த பஞ்சு மூட்டை கனத்திற்கு புத்தக மூட்டை பாவம் பள்ளியில்தான் தூங்க வேண்டும்!?
  • பாடம் புரிந்தால் படிக்கத் தோன்றும் புரிந்து படித்தால் தேர்வு எழுதுவது கடினமாக இருக்காது இல்லையா? புரிய வைப்பதற்கு ஆசிரியர்களுக்கு நேரம் இல்லை. பெற்றோர்களுக்கு நேரம் இல்லை. பிறகு!?
  • “டேக் இட் ஈஸி பாலிஸி” புன்னகைக்க வேண்டியதுதான் இல்லையா!?

பார்ப்போம்! சமச்சீர் கல்வி மூலம் என்ன விடிவுகாலம் பிறக்க போகிறது என்று!


என்னைப் பார் யோகம் வரும்

10:37 AM இல் அக்டோபர்21, 2009 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி

என்னைப் பார் யோகம் வரும் என்ற வாக்கியத்துடன் கூடிய கழுதை படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். உண்மையில் யோகம் யாருக்கு என்பதே என் கேள்வியும் சந்தேகமும்.

ஒரு அரசர் அதை கேள்விப்பட்டு ஒரு கழுதையை வாங்கி அரண்மனையில் கட்டும்படி கூறினாராம். அமைச்சரோ மன்னா! கழுதை இருக்கும் இடம் குட்டிச்சுவராகிவிடும் என்று பதிலளித்தாராம். கழுதையை விட மறுத்த அரசர் சரி அப்பொழுது கழுதையை தினமும் என் பார்வைக்கு அழைத்து வருமாறு பணிக்கவும் என்றாராம். அதே போல் ஏற்பாடு ஆனதாக ஒரு கதை, என் பாட்டி கூறியது உண்டு. அச்சிறிய வயதில் கதையின் முடிவை கேட்கவேயில்லை.

ஆனால் இப்பொழுது என்ன தோன்றுகிறது தெரியுமா?

அக்கழுதையை தினமும் அழைத்து வந்தானே அவனுக்கு யோகம் கூடியதா?

பாட்டி இல்லையே கேட்பதற்கு!?!

பதில் தெரிந்தால் யாரேனும் கூறுங்கள்.


மனிதர்கள் இப்படிதானோ?

10:01 AM இல் அக்டோபர்20, 2009 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள்

நாங்கள் அந்த ஏரியாவிற்கு புது வீடு கட்டி குடிசென்று ஏறக்குறைய 15 வருடங்கள் ஆகிறது. அந்த ஏரியாவிலே அப்பொழுது எங்கள் இல்லத்துடன் சேர்த்து மொத்தம் 4 வீடுகள்தான். எங்கள் வீடு அதன் அருகில் ஒரு வீடு. இந்த 2 வீட்டிற்கும் எதிரே 2 வீடுகள் அவ்வளவுதான். அந்த தெருமுனையின் கடைசி 4 வீடுகள் அவை. எங்கள் வீட்டிற்கு நேர் எதிரே உள்ள வீட்டில் இருந்த மனிதர்கள் மிகவும் விசித்திரமானவர்கள். (இப்பொழுது காலி செய்து விட்டனர்) அவர்களுக்கு ஏதாவது தேவை என்றால் மட்டுமே மற்ற மனிதர்கள் அவர்கள் கண்ணுக்கு தெரிவார்கள். நாங்கள் அவர்கள் கண்ணுக்கு அடிக்கடி தெரிவோம். ஏனென்றால் இந்த ஏமாளிகள் மூலம் அவர்களுக்கு தேவைப்பட்டது பல. ஆனால் காலி செய்து போகும்பொழுது ஒரு வார்த்தை சொல்லவும் இல்லை புது இல்லத்தின் முகவரியும் தரவில்லை. அங்கு எந்த ஏமாளி மாட்டினார்களோ?

எதிரே இருந்த மற்றொரு குடும்பத்தினர் மிகவும் நல்லவர்கள் மிக நட்போடு பழகினார்கள். ஒருவருக்கொருவர் மிகவும் நட்புடனும் விட்டுக்கொடுத்தலுடனும் நன்றாகத்தான் பழகினார்கள். 5 வருடங்களுக்கு முன் சில பல காரணங்களால் வீடு காலி பண்ணிச் சென்றனர். அதற்குப் பிறகும் எங்ஙகள் நட்பு தொடர்ந்தது. அவர்களின் பெண்ணும் பையனும் சிறுவயது முதலே எங்கள் குழந்தைகளுடன் சேர்ந்துதான் திரிவார்கள். படிப்பிலோ அல்லது மேற்படிப்பில் சேர்வது என்றாலோ எல்லா சந்தேகத்திற்கும் என் கணவர்தான் அவர்களின் முதல் குரு. சொல்லப் போனால் அப்பெண் என் கணவரின் பெறாத குழந்தை போல. அவர்கள் பெண்ணின் திருமணத்திற்கு கூட காலை சென்று மாலை ரிசப்~ன் முடிந்துதான் திரும்பினோம். அவர்கள் வீடு காலி செய்து சென்றபின் அப்பெண் ஒருமுறை கூட இங்கு வரவில்லை. திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் கழித்து நேற்றுதான் அப்பெண் தன் கணவருடன் அவளுடைய பழைய வீட்டை காண்பிக்க வந்திருந்தாள். அவள் வீட்டின் வாடகைக்கு குடியிருப்பவர்களை பார்த்து விட்டு உடனடியாக சென்று விட்டார்கள்.

இங்கு வருவாள் என்று எதிர்பார்த்த எங்களுக்கு மிகவும் ஏமாற்றமாகப் போனது.

அது ஏன்?!!!!

உண்மை அன்பிற்கு ஏமாற்றமே மிஞ்சுமோ?


Fruit Dessert

8:48 AM இல் அக்டோபர்19, 2009 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்

முக்கனிகளில் ஒன்றான தலைமையான பழங்களின் அரசனான மாம்பழம் பற்றி பார்ப்போம் 60 அடி உயரம் வரை வளரக்கூடிய தாவரவகையைச் சார்ந்தது. தென்கிழக்கு ஆசியாவில் 4000 வருடங்களுக்கு மேலாக இருக்கும் ஒரு மரவகை. இப்பொழுது உலகின் பல மூலைகளிலும் விரும்பி உண்ணும் ஒரு பழவகையாகி விட்டது. 1000 – க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

இதில் உள்ள சத்துக்கள்

  • பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், செலினியம் மக்னீஸியம், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்தவை.
  • நார்சத்து நிறைந்தது

உணவே மருந்து

  • imagesஇரத்தத்தை சுத்திகரிக்கிறது.
  • உடலின் அதிக சூட்டை தணிக்கிறது
  • சிலவகை தோல்புற்றுநோய் வருவதை தவிர்ப்பதற்கு இவை உதவுகின்றது.
  • ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதிகமாக கிடைக்கும். சீஸன் சமயத்தில் கிடைக்கும் பழங்களை நாம் உண்டுவருவதால் கிடைக்கக்கூடிய வைடட்டமின்களை நம்உடலில் உள்ள ஈரலில் அவை சேமிக்கப்பட்டு வருடமுழுவதற்குமான நோய் எதிர்ப்புசக்தியை நமக்கு அளிக்கிறது.
  • மாலைக்கண் நோய் வருவதை தடுக்கவும் உதவுகிறது. • இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரழிவு நோய் வருவதை தடுக்ககூடிய பேராற்றல் நிறைந்தது.
  • நாம் இழந்த பொட்டாசிய சத்துக்களை திரும்பப் பெற உதவுகின்றது. • ஆயுர்வேத மருத்துவத்தில் பசியை தூண்ட மிகவும் உதவும் மருந்தாகிறது.
  • தேனோடும், பாலோடும் மாம்பழங்களை சாப்பிடுவது நம் மாசுமருவற்ற உடலழகை தருகிறது.

முக்கனிகளில் அடுத்த பழமான பலாப்பழம் பற்றி பார்ப்போம் மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய பழவகைகளின் மிகப்பெரிய பழம் இதுவே.

தென்மேற்கு இந்தியா, பங்களாதே~; மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் அதிகம் விளையக் கூடியது. மிகவும் ருசியான, நிறைய சத்துக்கள் நிரம்பிய பழமும் இது ஆகும். புரோ

ட்டின், கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது.

உணவே மருந்து

  • இரத்த அழுத்தத்jackfruitதை குறைக்கிறது.
  • கேன்ஸரை எதிர்த்துப் போராடக்கூடிய குணம் இப்பழத்தில் உள்ளது.
  • ஜீரணத்திறனை அதிகரிக்கிறது. • தோல் அழகையும் இளமையையும் பாதுக்காக்கிறது.
  • உடல் எடையைக் குறைக்க விரும்புபவருக்கு இது ஒரு அருமையான டயட் ஆகும்.
  • இதன் பழம் மட்டுமில்லாமல் அதன் வேர், கொட்டை ஆகியவும் மருத்துவக் குணம் வாய்ந்தது
வாழைப்பழம்

b

  • இதிலும் பல அரிய மருத்துவ குணங்கள் உள்ளன.
  • இயற்கை சர்க்கரை எனப்படும் குளுகோஸ், சுக்ரோஸ் மற்றும் ப்ரோட்டோஸ் இதில் உள்ளது.
  • உடனடி சக்தியை அளிக்க வல்லது. இரும்பு சத்து, வைட்டமின் பி – 6, பொட்டாசியம் போன்ற சத்துகள் இதில் உள்ளன.
  • குழந்தைகளின் காலை உணவிற்கு மிகவும் ஏற்றது. காலை உணவில் இதை சேர்த்துக் கொண்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சிதிறன் அதிகரித்திருப்பதற்கான பல ஆதாரங்களும் உள்ளன.
  • ஜுரணக் கோளாறுகளையும், நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளையும் குறைப்பதற்கும், வராமல் தடுப்பதற்கும் இதன் பங்களிப்பு அதிகம்.    மேலே குறிப்பிட்டுள்ள முக்கனிகளையும் நாம் நம் வாழ்வில் சேர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்!!!

11:00 AM இல் அக்டோபர்12, 2009 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்

தாலி – ஒரு புனித சின்னம்

நேற்று விஜய் டி.வி யில் தாலி என்ற டாபிக் பற்றி அக்கு வேர் ஆணி வேர் தெரிய அலசினார்கள் ஒரு சிலர் அது புனிதமானது என்றும் ஒரு சிலர் அது இக்காலக் கட்டத்திற்கு தேவையற்ற ஒன்று என்றும் கூறினார்கள். ஒரு பெண் காலகாலமாக பெண்ணுலகம்  கேட்கும் கேள்வியையே கேட்டார். திருமணமாண பெண்ணுக்கு அடையாளம் தாலி என்றால் திருமணமாண ஆணின் அடையாளம்தான் என்ன என்று?

இப்படிபட்ட கேள்விகளுடன் இருக்கும் பெண்களுக்கு என் சிறிய வயதில் பள்ளிக்கூட நுலகத்தில் படித்தவற்றை பற்றி நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். பழங்காலத்தில் திருமணமாண பெண்களுக்கு தாலி அடையாளமாகவும், திருமணமாண ஆண்களுக்கு மெட்டி ஒரு அடையாளமாகவும் இருந்ததாம். அக்காலத்தில் பெண்கள் தலையை குனிந்துதான் நடப்பார்கள். எதிரில் வரும் ஆண் திருமணமாணவன் என்பதை அவன் காலில் அணியும் மெட்டியை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வராம். ஆண்கள் இப்பொழுது போலவே தலைநிமிர்ந்து நடப்பராம். எதிரில் வரும் பெண் திருமணமாணவள் என்பதை அவள் கழுத்தில் அணியும் மஞசள் கயிறை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வராம்.

ஆனால் இக்காலத்தில் ஆண்களுக்கு மெட்டி அணியும் சடங்கு ஒருசில திருமணங்களில் இருந்தாலும் ஆண் பிறகு அதை கழற்றி மனைவியடமே கொடுத்து அணியச் சொல்கிறான். பெண்களும் மஞ்சள் கயிற்றை தாலி பிரித்து கோர்க்கும் சடங்கில் அதை தங்க செயினாக மாற்றி விடுகின்றனர்.

எது எப்படியோ தாலி என்பது ஒரு புனிதம்தான் அக்கலாசாரத்தை தமிழ் மக்கள் காப்பாற் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆனால்  கண்வன் இறந்தவுடன் செய்யும் கொடுமையான சடங்கை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்  தாலி கழுத்தில் ஏறும் போது சிலிர்க்கும் ஒரு பெண் அக்கொடுமையான சடங்கின் போது சாகத்துடிக்கிறாள் என்பதையும் அவர்கள் புரிந்துக் கொள்ளவேண்டும். கணவன் இறந்ததை சீரணிக்கும் பெண் கூட தாலி இறக்கும் அச்சம்பவத்தில் அனலில் இட்ட புழு போல் துடிக்கிறாள்.

நாடகள் பல சென்ற பிறகு மனம் சமாதானம் அடைந்தப்பின் அவளே அதை கழட்டிவிடுவாள் என்பது என் தாழ்மையான கருத்து.

Short Supply of Aavin Products

10:02 AM இல் அக்டோபர்9, 2009 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்

ஆவின் தட்டுப்பாடு

ஆவின் பால் பொருட்கள் இன்னும் சரிவர மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. தீபாவளி நெருங்குவதாலும் விலை கம்மியாக இருப்பதாலும் அதிகமான மக்கள் ஆவின் வெண்ணெய் மற்றும் நெய்காக ரேஷன் கடை கீயு போல் நின்று பார்த்துவிட்டு “இன்று போய் நாளை வருவோம்” என்று ஆவின் பார்லரில் இருந்து ஏமாற்றத்துடனும் நாளை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் திரும்பி செல்கின்றனர்.

ஆவின் நிறுவனம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் இந்த தட்டுப்பாட்டினை சரிசெய்ய முடியவில்லை.

ஆவின் நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகோள்:

இம்முறை தீபாவளியை முன்னிட்டு மக்கள் ஆவினை விட்டு வேறு பிராண்டிற்கு மாறப்போகிறார்கள். விலை அதிகமாக இருந்தாலும் ருசி பிடித்துவிட்டால் மாறிய மக்களை மறுபடி பிடித்து இழுத்துவர பிரம்மபிரயத்தனம் செய்யவேண்டிவரலாம்.

சுதாரித்துக்கொள்ளவும்.

ந்னறி!

Obstacle

10:22 AM இல் அக்டோபர்8, 2009 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | மறுமொழியவும்

சோதனை – சாதனை

என்ன தலைப்பு இது அப்படீன்னு பார்க்கிறீங்களா!

ஆமாம் நண்பர்களே! உண்மைதான் ஒரு மனிதன் சோதனையை வென்றுதான் சாதிக்கிறான்.

சோதனையை சந்திக்காத மனிதர்கள் இந்த உலகில்? கம்மிதான்!!!.

ஆனால்?

சோதனையை வென்ற மனிதர்கள் மிகவும் கம்மி என்பது என் தாழ்மையான கருத்து.
சோதனை வந்தவுடன் மனிதன் என்ன செய்கிறான்? துவண்டுவிடுகிறான்!? அய்யோ! என்ன செய்வது? என் வாழ்க்கை அவ்வளவுதான்! இப்பிறவி எடுத்தது இதற்குதானா? என்றெல்லாம் புலம்பி தள்ள ஆரம்பித்துவிடுகிறான்.

இல்லையென்றால் இதுவும் கடந்து போகும் என்று வாளா இருந்துவிடுகிறான்.  இதுவும் கடந்து போகும்  என்று சிலசமயங்கிளில் விட்டுவிடுவது சாலசிறந்தது என்றாலும் எல்லா சமயங்களிலும் இருப்பது வெற்றிக்கான வழி இல்லை.

ஏன் எங்கு தவறு நேர்ந்தது என்று கண்டுபிடித்து மீண்டும் முய்ற்சிக்கு ஒருவனே சாதிக்கிறான்.

ஆகையால் சோதனை வந்தால் வாரே வா என்று உற்சாக துள்ளலோடு சந்தியுங்கள்.

வெற்றிக்கு என் வாழ்த்துகள் உங்களுக்கு!!!

மீண்டும் சந்திப்போம்.

அடுத்த பக்கம் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
வரவுகள் மேலும் மறுமொழிகள் feeds.

Follow

Get every new post delivered to your Inbox.